ரஜினிகாந்த் மகள் வீட்டில் நகைகள் கொள்ளை.!
சென்னையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் தங்கம், வைர நகைகள் திருட்டு என புகார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யாவின் சென்னையிலுள்ள வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் வைரம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வைரம், நெக்லஸ்கள் உள்ளிட்ட சுமார் பல லட்சம் மதிப்புள்ள 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஐஸ்வர்யா, புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் பணிபுரிந்த பணியாளர்கள் தொடங்கி சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.