PS-2 ரிலீஸை முன்னிட்டு மனைவியுடன் நடிகர் ஜெயராம் சபரிமலை தரிசனம்.!
மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஜெயராம், தீவிர ஐயப்ப பக்தர் ஆவார். அப்படி அந்த உலகப் புகழ்பெற்ற சபரிமலை கோவிலுக்கு அடிக்கடி செல்வதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில், தனது மனைவியுடன் சபரிமலை கோவிலுக்குச் சென்ற புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு கணத்த பிரார்த்தனையின் போது அவரது மனைவியுடன் கைகளைக் கூப்பியபடி நிற்கும் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஜெயராம் தற்போது தனது சமீபத்திய படமான பொன்னியின் செல்வன் 2-ஐ விளம்பரப்படுத்தி வருகிறார். அந்த புகைப்பதை தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்து கொண்ட அவர், “சுவாமி சரணம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸை முன்னிட்டு இவர் படக்குழுவுடன் இல்லாமல், இப்படி சமூக வலைத்தளங்களில் ப்ரோமோஷன் செய்து வருகிறார். படத்தின் முதல் பாகம் வெளியிட்டின்போதும் இது போன்ற யுத்தியை அவர் கையாண்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
மலையாள சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுத்துள்ள இவர், தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் கடைசியாக ராவணாசுரனில் ரவி தேஜாவுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். தற்போது சிவராஜ்குமாருடன் இணைந்து பேய் என்ற கன்னட த்ரில்லரில் நடித்து வருகிறார்.