தம்பியை நம்புனா வேலைக்கு ஆகாது! ஜெயம் ரவிக்கு போட்டியாக இறங்கிய மோகன் ராஜா!

mohan raja and jayam ravi

நடிகர் ஜெயம் ரவி தற்போது சைரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரதர், தக்லைஃப், தனி ஒருவன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தொடர்ச்சியாக இவர் பல படங்களில் நடித்து வரும் நிலையில், எப்போது தான் தனி ஒருவன் 2-வில் நடிப்பார் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

எனவே, இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது. இதனையடுத்து, தற்போது தனிஒருவன் 2 படத்திற்கு கால்ஷீட் கொடுக்கும் நோக்கத்தில் இல்லயாம். அடுத்த ஆண்டு தனி ஒருவன் 2 படத்திற்கான கால்ஷீட் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அது மட்டுமின்றி மோகன் ராஜா ஏற்கனவே எம்.குமரன் சன் ஆப்  மகாலட்சுமி 2 எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்து இருந்தார்.

இந்த இரண்டு படங்களில் ஜெயம் ரவியை நம்பி கமிட் செய்து வைத்திருக்கும் மோகன் ராஜா தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், ஜெயம் ரவி இன்னும் கால்ஷீட் கொடுக்காத காரணத்தால் மோகன் ராஜாவும் நடிப்பில் இறங்கவுள்ளாராம். அதன்படி, அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவுக்கு அண்ணனாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!

இவர் இந்த படத்திற்கு முன்பு என்ன சத்தம் இந்த நேரம், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில்  முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது சாந்தனு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் அவருக்கு அண்ணனாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.

தன்னுடைய தம்பி ஜெயம் ரவி தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருவதன் காரணமாக தனி ஒருவன் 2 படம் எடுக்க சற்று தாமதமாகும் என்பதால்  அவர் படங்களில் நடித்து முடித்து வருவதற்குள் நாமும் ஒரு படத்தில் நடித்து முடித்து விடலாம் என மோகன் ராஜா நடிப்பில் இறங்கி உள்ளாராம். விரைவில் அவர் நடிக்கவுள்ள படத்தின் மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்