கோடி ரூபா கொடுத்தாலும் அதை மட்டும் பண்ணவே மாட்டேன்! ஜெயம் ரவி பிடிவாதம்!
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது உடல் எடையை சற்று அதிகமாக வைத்து இருந்தார். அதன்பிறகு அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களுக்காக தனது உடல் எடையை குறைத்து வருகிறார். குறிப்பாக அவர் சமீபத்தில் நடித்த சைரன் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து இருந்தார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி மேற்கொள்ளும் டயட் பிளான் மற்றும் கோடி ரூபாய் கொடுத்தாலும் வெஜிடேரியன் ஆக மாறவே மாட்டேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் வழக்கமாகவே நான் டயட்டில் இருக்கும் போது காலையில் 3 இட்லி, 5 வேகவைத்த முட்டைகள் எடுத்துக்கொள்வேன்.
read more – தமிழ் சினிமாவில் கால் பதிக்க துடிக்கும் நடிகை ஸ்ரீலீலா?
மதியம் சாப்பிடும் போது கால் கிலோ சிக்கன், தினசரி ஏதேனும் ஒரு கீரையை எடுத்துக்கொள்வேன். கீரை உடலுக்கு மிகவும் நல்லது.இரவில் புரோட்டின் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வேன். இரவு உணவை மாலையிலே முடித்துக்கொள்வது சிறந்தது. ஆனால், நான் கொஞ்சம் பட பிடிப்பு சமயங்களில் பிசியாக இருப்பதால் அதனை சரியாக செய்ய முடியாது.
வீட்டுக்கு வந்து இரவு 9 மணிக்குதான் இரவு சாப்பாடு சாப்பிடுவேன். என்னிடம் இருந்து நான் இதனை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். முடிந்த அளவிற்கு இரவு நேர சாப்பாட்டை சீக்கிரம் சாப்பிடுங்கள். எனக்கு அசைவம் மிகவும் பிடிக்கும். சைவமும் பிடிக்கும் ஆனால், கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் வெஜிடேரியன் ஆக மாறமாட்டேன் என்று கூறியுள்ளார்.