எலக்சன் முடிந்ததும் ‘தக் லைஃப்’ சம்பவம்…கம்பேக் கொடுத்த ஜெயம் – துல்கர்! டபுள் கேம் ஆடும் சிம்பு.!

Thug Life: கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்தியன் 2 படத்திற்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் தக் லைஃப். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில், நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர்.
சமீபத்தில் கால் ஷீட் அமையாததால் படத்தில் இருந்து இருவரும் விலகியதாக தகவல் வெளியானது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இணையதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
அதன்பின், புதுடெல்லி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.