இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவில், டாக்டர் டிரே குளோபல் இம்பாக்ட் விருதைப் வென்ற “ஜெய் இசட்” தனது விருது கோப்பையில் மது அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளில் ஒன்று ‘கிராமி விருதுகள்’. ஆண்டுதோறும் தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடெமி (National Academy of Recording Arts & Sciences) வழங்கி வருகிறது.
அந்த வகையில், 66வது ஆண்டு கிராமி விருதுகள் விழா கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் நடைபெற்றது. அதில் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில், அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய்-இசட்-க்கு இசைத்துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், டாக்டர் ட்ரே குளோபல் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. டாக்டர் ட்ரே குளோபல் இம்பாக்ட் விருதை ஏற்றுக்கொண்ட ஜே-இசட், மகள் ப்ளூ ஐவியை மேடையில் அழைத்து சென்று விருதினை பெற்று கொண்டார்.
கிராமி விருதுகள் 2024: வெற்றியாளர்களின் முழு பட்டியல்!
விருதை பெற்று கொண்ட ஜெய்-இசட் மேடையில் கீழே வந்து தனது சக நண்பர்களுடன், இதனை கொண்டாடும் வகையில், தான் பெற்று கொண்ட கிராமிய விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தியுள்ளார். ஜெய்-இசட் தனது விருது கோப்பையில் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெய்-சி (Jay-Z) என்ற அழைக்கப்படும் ஷான் கோரி கார்டர், அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிறந்து வளந்த இவர், சிறுவயதிலேயே இருந்து இசை துறையில் தீரா ஆர்வம் கொண்டவர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…