இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆன நிலையிலும், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை என்று கூறலாம்.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த திரைப்படம் அந்த அளவிற்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடைசியாக ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் அவருக்கு 1000 கோடி வசூல் கொடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து ஜவான் திரைப்படமும் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளதால் பாலிவுட் திரையுலகமே ஷாருக்கான் கொண்டாடி வருகிறத.
அதைப் போல ஜவான் படத்தின் இயக்குனர் அட்லீ கடைசியாக விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜவான் படத்தை அவர் இயக்கி இருந்த நிலையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து அவருக்கும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ பெரிய இயக்குனர்கள் இருந்தும் அவர்கள் பாலிவுட்டிற்கு சென்று ஒரு படம் எடுத்து அந்த படம் 1000 கோடி வசூல் செய்ததே இல்லை. ஜவான் திரைப்படம் தான் முதல் முறை. எனவே தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் செய்த படம் எடுத்த இயக்குனர் என்ற சாதனையை இயக்குனர் அட்லீ தற்போது படைத்துள்ளார்.
மேலும், ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தமிழ் சினிமாவில் இருந்து அவருக்கு பெரிய வாய்ப்பு வந்ததாகா அட்லீயே தெரிவித்து இருந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…