இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா, யோகி பாபு, பிரியாமணி, பிரியாமணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ஏனென்றால், ஜவான் திரைப்படத்தின் இன்னும் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரமோஷன் பணிகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாகவே படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் புது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் ஜனவரி மாதம் திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், ஜவான் படத்தை பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படவுள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…