Jason Sanjay : சபாஷ் சரியான தேர்வு ! ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ இவர் தான்!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இயக்கம் மீதும் மிகவும் ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படம் உருவாக்கம் பற்றி படித்து வந்தார். பிறகு படித்து முடித்த கையேடு ஜேசன் சஞ்சய் “trigger” எனும் சிறிய குறும்படம் ஒன்றையும் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில், இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அவர் நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இருப்பினும் அந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு எல்லாம் வெளியாகவில்லை.
எனவே, விஜய் மகன் இயக்கும் இந்த திரைப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் பரவி வந்தது. அது என்னவென்றால், விஜய் மகன் இயக்கும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க பிரபல நடிகர்களான, கவின், ஹரிஸ் கல்யாண், அதர்வா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவியது.
இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் கவின் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. படத்தின் கதைக்கு கவின் சரியாக இருப்பதால் ஜேசன் சஞ்சய் அவரை தேர்வு செய்து உள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, டாடா எனும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த கவினுக்கு மார்க்கெட் நன்றாக இருக்கிறது. அதைப்போல இளைஞர்களுக்கு கவரும் வகையில் நல்ல காதல் படங்கள் அவருக்கு அமைந்தால் அதில் சரியாக நடித்து செட் ஆகிவிடுகிறார். எனவே, ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தில் கைவினைதேர்வு செய்தது நல்ல தேர்வு தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த திரைப்படம் கவின் நடிப்பது உறுதியானது என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கவின் தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.