Categories: சினிமா

ஜப்பான் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா? ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published by
பால முருகன்

நடிகர் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த திரைப்படம் ஜப்பான். இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்திருந்தார். சுனில், பாவா செல்லதுரை, விஜய் மில்டன், ஆஷ்னா சுதீர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

இந்த திரைப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

கடுமையான உடற்பயிற்சியில் நடிகை ரித்திகா சிங்! எல்லாம் ரஜினி படத்திற்காக தான்!

தமிழகத்தில் நடந்த திருட்டு சம்பவம் ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு சரியான விமர்சனத்தை பெறவில்லை. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. திரையரங்குகளில் வெளியான இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது படம் எந்த ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜப்பான் திரைப்படம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தை வாங்க எந்த நிறுவனம் முன் வரவில்லை என்ற தகவல் பரவி கொண்டு இருந்த நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தை வாங்கியுள்ள நிலையில், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ஜப்பான் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago