ஜப்பான் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா? ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த திரைப்படம் ஜப்பான். இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்திருந்தார். சுனில், பாவா செல்லதுரை, விஜய் மில்டன், ஆஷ்னா சுதீர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
கடுமையான உடற்பயிற்சியில் நடிகை ரித்திகா சிங்! எல்லாம் ரஜினி படத்திற்காக தான்!
தமிழகத்தில் நடந்த திருட்டு சம்பவம் ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு சரியான விமர்சனத்தை பெறவில்லை. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. திரையரங்குகளில் வெளியான இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது படம் எந்த ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜப்பான் திரைப்படம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தை வாங்க எந்த நிறுவனம் முன் வரவில்லை என்ற தகவல் பரவி கொண்டு இருந்த நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தை வாங்கியுள்ள நிலையில், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ஜப்பான் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.