நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அனு இம்மானுவேல் கார்த்தியை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கார்த்தியை பார்த்து நான் ஒரு விஷயத்தை கற்று கொண்டேன்.
அது என்னவென்றால், படத்தின் கதையை தேர்ந்து எடுத்து நடிப்பதில் தான். அவர் தேர்வு செய்து நடித்து வரும் படங்களின் கதை எல்லாம் வித்தியாச வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை அவர் கதைகளை தேர்வு செய்யும் விதத்தை நான் ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன். அவர் இந்த மாதிரி கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கெட்டிக்காரர்.
அவரை பார்த்து தான் நானும் கதைகளை தேர்வு செய்து நடிக்கலாம் என்பதனை கற்றுக்கொண்டேன். ஜப்பான் படத்தில் அவருடன் நடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் நன்றாக வந்திருக்கிறது. படமும் மிகவும் அருமையாக இருக்கும் கண்டிப்பாக மக்கள் அனைவர்க்கும் இந்த திரைப்படம் பிடிக்கும்” எனவும் அனு இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
இதைப்போலவே, ஜப்பான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும், கார்த்தியின் அண்ணனுமான சூர்யா ” கார்த்தி ஒவ்வொரு படங்களுக்கு ஒவ்வொரு படமும் வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் அப்படி எல்லாம் இல்லை அவருடைய பாணி வேறு என்னுடைய பாணி வேறு. அவரை போல நான் கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்கமாட்டேன்” என கார்த்தியை பாராட்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…