கார்த்தி அந்த விஷயத்தில் ரொம்ப கெட்டிக்காரர்! மனம் திறந்த நடிகை அனு இம்மானுவேல்!

anu emmanuel about karthi

நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்,  படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அனு இம்மானுவேல் கார்த்தியை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கார்த்தியை பார்த்து நான் ஒரு விஷயத்தை கற்று கொண்டேன்.

அது என்னவென்றால், படத்தின் கதையை தேர்ந்து எடுத்து நடிப்பதில் தான். அவர் தேர்வு செய்து நடித்து வரும் படங்களின் கதை எல்லாம் வித்தியாச வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை அவர் கதைகளை தேர்வு செய்யும் விதத்தை நான் ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன். அவர் இந்த மாதிரி கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கெட்டிக்காரர்.

அவரை பார்த்து தான் நானும் கதைகளை தேர்வு செய்து நடிக்கலாம் என்பதனை கற்றுக்கொண்டேன். ஜப்பான் படத்தில் அவருடன் நடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் நன்றாக வந்திருக்கிறது. படமும் மிகவும் அருமையாக இருக்கும் கண்டிப்பாக மக்கள் அனைவர்க்கும் இந்த திரைப்படம் பிடிக்கும்” எனவும் அனு இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

இதைப்போலவே, ஜப்பான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும், கார்த்தியின் அண்ணனுமான சூர்யா ” கார்த்தி ஒவ்வொரு படங்களுக்கு ஒவ்வொரு படமும் வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் அப்படி எல்லாம் இல்லை அவருடைய பாணி  வேறு என்னுடைய பாணி வேறு. அவரை போல நான் கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்கமாட்டேன்” என கார்த்தியை பாராட்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Pakistan PM
Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son