Categories: சினிமா

இந்த தீபாவளி ஜப்பான் தீபாவளி தான்…அமெரிக்காவில் அதிரடி காட்டும் கார்த்தி!

Published by
கெளதம்

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், ஜப்பான் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் மாஸாக களமிறங்குகிறது.

ஆம், அமெரிக்காவில் மட்டும் சுமார், 400 திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது என அவிக்கப்பட்டுள்ளது. இது கார்த்தி திரையுலக வாழ்க்கையில், மிகப்பெரிய வெளியிடாக அமையும். முன்னனி நடிகர்களுக்கு இணையாக வெளிநாடுகளில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் தீபாவளி

முன்னதாக, கைதி திரைப்படம்  2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அப்பொழுது, அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதேபோல், சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த ‘சர்தார்’ திரைப்படமம்  ரூ.100 கோடி வசூல் செய்தது. அந்த வகை, இந்த இந்தாண்டு தீபாவளிக்கு ஜப்பான் வருகிறது, மாபெரும் வசூல் சாதனை படைக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி ரேஸில் 3 படம்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜப்பான் படம் மட்டும் தனியாக ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்துடன் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படமும் விக்ரம் பிரபு நடித்துள்ள “ரெய்டு” திரைப்படமும் வெளியாகவுள்ளதால் தீபாவளிக்கு கடுமையான போட்டி நிலவும் என கூறப்படுகிறது.

படத்தின் கதை

சில வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் ஒரு பிரபல நகைக்கடையில் கொள்ளை கும்பல் சுவரைத் துளையிட்டு கிலோ கணக்கினான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. பின்னர், தமிழக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து சுமார் 10 பேர் கொண்ட அந்த கொள்ளை கும்பலை கைது செய்தனர்.

எனவே, இந்த சம்பவத்தை வைத்து தான் ஜப்பான் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. உண்மையில் படம் அந்த சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டதா இல்லையா என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும்.

Published by
கெளதம்

Recent Posts

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

20 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…

32 minutes ago

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…

49 minutes ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ‘இவர்’ தான்! அடித்து கூறும் நெட்டிசன்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…

58 minutes ago

களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுக்கள்…

1 hour ago

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…

2 hours ago