இந்த தீபாவளி ஜப்பான் தீபாவளி தான்…அமெரிக்காவில் அதிரடி காட்டும் கார்த்தி!
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், ஜப்பான் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் மாஸாக களமிறங்குகிறது.
ஆம், அமெரிக்காவில் மட்டும் சுமார், 400 திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது என அவிக்கப்பட்டுள்ளது. இது கார்த்தி திரையுலக வாழ்க்கையில், மிகப்பெரிய வெளியிடாக அமையும். முன்னனி நடிகர்களுக்கு இணையாக வெளிநாடுகளில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் தீபாவளி
முன்னதாக, கைதி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அப்பொழுது, அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதேபோல், சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த ‘சர்தார்’ திரைப்படமம் ரூ.100 கோடி வசூல் செய்தது. அந்த வகை, இந்த இந்தாண்டு தீபாவளிக்கு ஜப்பான் வருகிறது, மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி ரேஸில் 3 படம்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜப்பான் படம் மட்டும் தனியாக ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்துடன் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படமும் விக்ரம் பிரபு நடித்துள்ள “ரெய்டு” திரைப்படமும் வெளியாகவுள்ளதால் தீபாவளிக்கு கடுமையான போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
படத்தின் கதை
சில வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் ஒரு பிரபல நகைக்கடையில் கொள்ளை கும்பல் சுவரைத் துளையிட்டு கிலோ கணக்கினான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. பின்னர், தமிழக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து சுமார் 10 பேர் கொண்ட அந்த கொள்ளை கும்பலை கைது செய்தனர்.
எனவே, இந்த சம்பவத்தை வைத்து தான் ஜப்பான் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. உண்மையில் படம் அந்த சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டதா இல்லையா என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும்.