இந்தியாவின் வளர்ச்சியில் அம்பேத்கரும்.. காந்தியும்.! ஜான்வி கபூரின் அசத்தல் கருத்து.!

Published by
பால முருகன்

ஜான்வி கபூர் : காந்தியும், அம்பேத்கரும் நமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள் என பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தற்போது “மிஸ்டர் & மிஸஸ் மஹி” என்ற திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வரும் மே 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் , படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகம் ஒன்றுக்கு ஜான்வி கபூர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தான் காந்தி, அம்பேத்கர் போன்ற அந்த மாபெரும் தலைவர்களிடையே நடக்கும் விவாதங்களை பார்ப்பது மிகவும் நல்லா இருக்கும் என்று மனம் திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” டாக்டர் அம்பேத்கருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப்  பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

இவர்கள் இரண்டு பேருமே இந்திய சமூகத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு கொண்டு இருக்கிறார்கள். இருவரும், சமூக மாற்றத்தில் எதற்காக நிற்கிறார்கள், குறிப்பிட்ட தலைப்பில் அவர்களின் பார்வைகள், எண்ணங்கள் காலப்போக்கில் எவ்வாறு மாற்றம் அடைந்தது என்பது பற்றிய விவாதம் கேட்பதற்கு நன்றாக இருக்கும் சுவாரசியமாக இருக்கும்.  ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதில் அம்பேத்கர் தெளிவாக தெரிவித்தார். சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் மேலும் மேலும் வெளிப்படுத்தியதால் காந்தியின் பார்வை மாறிக்கொண்டே வந்தது என்று நான் நினைக்கிறேன்.

இதைப் பற்றி ஒரு மூன்றாம் நபரின் கண்ணோட்டத்தில் அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது என்பதும் அதை சகித்துக்கொள்வதும் ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமானது” எனவும் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். பலரும் ஜான்வி கபூர் பேசியதற்கு தெளிவாக பேசுகிறார் என பாராட்டி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

35 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

41 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

58 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago