இந்தியாவின் வளர்ச்சியில் அம்பேத்கரும்.. காந்தியும்.! ஜான்வி கபூரின் அசத்தல் கருத்து.!
ஜான்வி கபூர் : காந்தியும், அம்பேத்கரும் நமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள் என பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தற்போது “மிஸ்டர் & மிஸஸ் மஹி” என்ற திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வரும் மே 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் , படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகம் ஒன்றுக்கு ஜான்வி கபூர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தான் காந்தி, அம்பேத்கர் போன்ற அந்த மாபெரும் தலைவர்களிடையே நடக்கும் விவாதங்களை பார்ப்பது மிகவும் நல்லா இருக்கும் என்று மனம் திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” டாக்டர் அம்பேத்கருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
இவர்கள் இரண்டு பேருமே இந்திய சமூகத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு கொண்டு இருக்கிறார்கள். இருவரும், சமூக மாற்றத்தில் எதற்காக நிற்கிறார்கள், குறிப்பிட்ட தலைப்பில் அவர்களின் பார்வைகள், எண்ணங்கள் காலப்போக்கில் எவ்வாறு மாற்றம் அடைந்தது என்பது பற்றிய விவாதம் கேட்பதற்கு நன்றாக இருக்கும் சுவாரசியமாக இருக்கும். ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதில் அம்பேத்கர் தெளிவாக தெரிவித்தார். சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் மேலும் மேலும் வெளிப்படுத்தியதால் காந்தியின் பார்வை மாறிக்கொண்டே வந்தது என்று நான் நினைக்கிறேன்.
இதைப் பற்றி ஒரு மூன்றாம் நபரின் கண்ணோட்டத்தில் அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது என்பதும் அதை சகித்துக்கொள்வதும் ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமானது” எனவும் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். பலரும் ஜான்வி கபூர் பேசியதற்கு தெளிவாக பேசுகிறார் என பாராட்டி வருகிறார்கள்.