இலங்கை பெண்ணான ஜனனி, இலங்கை தொலைக்காட்சியில் உடல் நலம் சார்ந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வந்தார். கடந்த ஆண்டு தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்து கொண்டார்.
இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடுத்த அழகான ரியாக்சன் அவருக்கு பல இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டத்தை அவருக்கு பெற்று கொடுத்தது என்றே கூறலாம். குறிப்பாக, அவர் தனது தனித்துவமான ஸ்லாங் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் ஜனனிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எந்த ஒரு படப்பிடிப்பிலும் இல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தனியார் ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, அவரிடம் உங்களுக்கு வருங்கால கணவர் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அழகு எல்லாம் மீட்டரே இல்லை… நல்ல பையனா இருக்கணும். ஒரு பொண்ணுக்கு உண்மையாக இருக்கும் பையனாக இருந்தால் போதும்.
அதுவும், இந்த காலத்தில் உண்மையாக இருக்கும் கணவரோ, காதலரோ கிடைத்தால் அது பெரிய விஷயம் என்று கூறிய அவர், அந்த மாதிரி ஒரு பையன் கிடைத்தால் போதும், “தூக்குடா அந்த தங்கத்தை” என்று இலங்கைக்கு கூட்டிட்டு போய், நல்லா பார்த்துப்பேன். சீதனம் எல்லாம் கேட்க மாட்டேன், போட்டு இருக்கிற ட்ரெஸ் ஓட வந்த மட்டும் போதும், நா உங்கள வச்சி நல்லா பார்த்துப்பேன் என்று ஜனனி தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…