கில்லி படத்தில் அம்மாவாக நடித்த நடிகைக்கும் விஜய்க்கும் ஒரே வயசா?
![Janaki Ganesh ghilli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/04/Janaki-Ganesh-ghilli.webp)
Janaki Ganesh : விஜய்க்கும் தனக்கும் ஒரே வயது இல்லை என கில்லி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த ஜானகி சபேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் இந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் ஆன படங்கள் இந்த அளவுக்கு கொண்டாடப்படுமா? என்கிற அளவுக்கு கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வசூல் ரீதியாகவும் கில்லி படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து கொண்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து இருந்தார். விஜய்க்கு அம்மாவாக நடிகை ஜானகி சபேஷ் நடித்து இருந்தார். பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, நாகேந்திர பிரசாத், மயில்சாமி, நான்சி ஜெனிபர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
இந்த படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜானகி சபேஷ் வயது இப்போது 49 தான் என்றும், விஜய்க்கும் இப்போது 49 எனவே ஒரே வயதில் இருக்கும் ஹீரோவுக்கு எப்படி அம்மாவாக நடிக்க ஒப்பு கொண்டார் என்பது போல சமூக வலைத்தளங்களில் கேள்விகள் விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஜானகி சபேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் உங்களுக்கும் விஜய் சாருக்கும் வயது ஒரே வயாதா? என்ற கேள்வியை தொகுப்பாளர் கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ” நான் விஜய்க்கு முன்னாடி இருந்தே படங்களில் நடித்து கொண்டு இருக்கிறேன். நான் கொஞ்சம் பெரிய பெண்ணாக இருந்தபோது அவர் என்னோடு சிறிய பையன்.
கூகுளில் என்னுடைய வயதை தேடி பார்த்தால் அது தவறாக காட்டுகிறது. நான் விரைவில் என்னுடைய உண்மையான வயது என்னவென்றும் என்னுடைய உண்மையான பிறந்த தேதி எது என்றும் விரைவில் அப்டேட் செய்கிறேன். ஆனால், விஜய்க்கும் எனக்கும் ஒரே வயது என்று பரவும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி” எனவும் ஜானகி சபேஷ் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)