anirudh [file image]
சென்னை : இன்னும் அனிருத் நல்ல இசையமைக்க முயற்சி செய்யவேண்டும் என்று ஜேம்ஸ் வசந்தன் தனது அட்வைஸ கொடுத்துள்ளார்.
இந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டு இருப்பவர் தான் அனிருத். இவருடைய இசையில் வெளியாகும் பாடல்கள் எந்த அளவிற்கு ஹிட் ஆகி அந்த படங்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
ஹிட் பாடல்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்தாலும் கூட அனிருத் இசையமைக்கும் பாடல்கள் காலங்கள் கடந்து பேசக்கூடிய வகையில் இருக்கவேண்டும் என்றும், அவர் அந்த மாதிரி பாடல்களை இசையமைக்க முயற்சி செய்யவேண்டும் எனவும் பிரபல முன்னணி இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன் ” அனிருத் பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கிறது. இப்போது பல படங்கள் அவருடைய பின்னணி இசை காரணமாகவே ஹிட் ஆவதாக நான் நினைக்கிறன். அந்த அளவிற்க்கு பின்னணி இசைக்கு அனிருத் முக்கிய துவம் கொடுத்து இருக்கிறார். ஆனால், நான் அவருக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் 10 ஆண்டுகள் சினிமாவுக்கு வந்து பெயர் பெற்று புகழ் அடைந்துவிட்டாச்சு.
எனவே, இனிமேல் காலங்கள் கடந்து பேசப்படும் பாடல்களை அனிருத் இசையமைக்க வேண்டும். கண்டிப்பாக அது அவரால் முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் இந்த காலத்துக்கு ஏற்றது போல பாடல்களை இசையமைக்கிறார். பாடல்கள் ரொம்பவே ஹிட் ஆகி விடுகிறது இதன் காரணமாக அதற்கான லாபமும் வந்துவிடுகிறது. எனவே, பாடல்கள் ஹிட் ஆகிறது இதுவே போதும் என்று அனிருத் இருக்கிறார்.
ஆனால், அதெல்லாம் நிறுத்திவிட்டு அனிருத் இனிமேல் காலங்கள் கடந்து எப்படியெல்லாம் பாடல்கள் இருக்கவேண்டுமோ பேசப்படவேண்டுமோ அந்த அளவுக்கு நல்ல இசையமைக்க முயற்சி செய்யவேண்டும். கண்டிப்பாக அவரால் முடியும் என்று நான் நினைக்கிறன்” என்று இசையமைப்பாளர் அனிருத்துக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது அட்வைஸ கொடுத்துள்ளார்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…