Avatar 3 [file image]
உலகம் முழுவதும் மக்கள் பலரும் வியந்து பார்க்கும் ஒரு திரைப்படம் எதுவென்றால், அவதார் என்றே கூறலாம். முதல் பாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், அதனுடைய இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றது.
அவதார் திரைப்படம் மொத்தமாக 5 பாகங்களாக வெளியாகும் என படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி, ‘அவதார் 3’ டிசம்பர் 19, 2025 க்கும், ‘அவதார் 4’ டிசம்பர் 21, 2029 க்கும், ‘அவதார் 5’ டிசம்பர் 19, 2031 ஆண்டும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் இதன் இரண்டாம் பாகம் சுமார் 160 மொழிகளில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் குவித்தது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று படம் பற்றி பேசிய ஜேம்ஸ் கேமரூன், “இந்த முறை கதாபாத்திரங்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறோம்.
நல்ல கதையுடன் காட்சியமைப்புடன் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருவதாகவும் விரைவில், டீசரை வெளியிட இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், சிறந்த டீஸரை பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்த அவர், மூன்றாவது பாகத்தில் மற்றொரு புதிய உலகம், வித்தியாசமான கதை மற்றும் பல அதிரடி காட்சிகளை காணலாம்” என்றார்.
பேஷ் பேஷ்…நாளை வெளியாகும் 4 தரமான தமிழ் திரைப்படங்கள்.!
மேலும் ‘இதில் இன்னொரு புது உலகம், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரங்கள் இருக்கும். கடலுக்கு அடியில் அற்புதமான காட்சிகளை உங்களுக்கு வழங்குவோம். அவதாரில் கேட் வின்ஸ்டிட்டின் ரோனல் கதாபாத்திரமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர் மிகவும் கடினமாக பயிற்சி செய்வதாக’ தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…