ஜாலியா நீ வாடி…செம குத்தாட்டம் போடும் அனிருத் – ஜோனிதா காந்தி.! வைரலாகும் வீடியோ.!

Default Image

இசையமைப்பாளர் அனிருத் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று, அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இசை கச்சேரி நடத்தினார்.

Anirudh
Anirudh [Image Source: Google]

அவருடன் பாடகி ஜோனிதா காந்தியும் வந்தார். இவர்கள் இருவரது கூட்டணியில் வெளியான செல்லமா, பிரைவேட் பார்ட்டி, அரபிக்குது ஆகிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட்டானது என்றே கூறலாம்.  எனவே, இதன் காரணமாக அவரும் அனிருத்தின் இசை கச்சேரிக்கு வருகை தந்துள்ளார்.

நேற்று கோலாகலமாக நடைபெற்ற இந்த இசைக்கச்சேரியில் ரசிகர்களுக்கு பிடித்த பல பாடல்கள் பாடப்பட்டது. பிறகு டான் படத்தில் இடம்பெற்றிருந்த  பிரைவேட் பார்ட்டி பாடலுக்கு அனிருத் – ஜோனிதா காந்தி இருவரும் மேடையில் செம குத்தாட்டம் போட்டுள்ளனர்.  அதற்கான வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Anirudh Ravichander
Anirudh Ravichander [Image Source: Google]

மேலும், இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்தியன் 2, ஜவான், லியோ, ஜெயிலர்,  ஜூனியர் என்டிஆர் 30, ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்