இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் படத்துக்கு எப்படி வந்தாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் 230கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, சதீஷ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற விஜய் ஜாலியா ஜிம்கானா என்ற பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றியிருந்தது. இதற்கான வீடியோ பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில். தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜாலியா ஜிம்கானா வீடியோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள்…
டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம்,…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…
கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…
கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…