இயக்குனர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தின் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு செக் மற்றும் கார்களை பரிசாக வழங்கி இருந்தார்.
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு படத்தின் லாபத்தில் இருந்து வந்த பங்கில் இருந்து காசோலையை வழங்கி பிறகு பிஎம்டபிள்யூ (BMW x7) காரை பரிசளித்தார். அதன்பிறகு படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு காசோலை மற்றும் போர்ஷே (Porsche) காரும் காசோலையும் வழங்கப்பட்டது. அதைப்போல படத்தின் இசையமைப்பாளரான அனிருத்திற்கும் காசோலையுடன் போர்ஷே (Porsche) காரும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த காசோலைகளில் எவ்வளவு பணம் கலாநிதி மாறன் கொடுத்திருப்பார் என பலரும் குழப்பத்தில் இருந்த நிலையில், அதற்கான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட காசோலையில் 30 கோடி எனவும் அண்ணாத்த படம் சரியாக போகவில்லை என்ற காரணத்தால் ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து கலாநிதி மாறன் 30 கோடி பணம் செக்ஆக கொடுத்து முடித்துவிட்டாராம்.
அதைப்போல, படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு 2 கொடுக்கப்பட்டுள்ளதாம். படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கலாநிதி மாறன் கொடுத்துள்ள இந்த காசோலைக்கான தகவல் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த அந்த காசோலை 100 கோடி ரூபாய் என வதந்தி தகவல் பரவி வந்த நிலையில், தற்போது 30 கோடி தான் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ள நிலையில், 100 கோடி எல்லாம் சும்மா கதை தானா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…