ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் வெளியாகி 1 மாதங்களை நெருங்கியுள்ள நிலையில், படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூல் ரீதியாகவும் படம் அணைத்து இடங்களிலும் பல சாதனைகளை படைத்தது வருகிறது.
படம் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் 530 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் இருக்கும் ரசிகர்கள் ஓடிடியில் படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது படம் ஓடிடியில் வெளியாகும் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜெயிலர் திரைப்படம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. எப்போதும் வழக்கமாக சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றும். ஆனால், இந்த முறை அமேசான் பிரேம் ஜெயிலர் படத்தை கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே, ஜெயிலர் படத்தை 100 கோடி கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதனை விட அதிக தொகை கொடுத்து அதாவது 120 கோடி வரை கொடுத்து படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ ஒரு வழியாக ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும், இந்த ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார், மிர்னா மேனன், தமன்னா, மோகன்லால், வசந்த் ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…