ஜெயிலர் வெளியீடு: ரஜினிக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

JailerAudioLaunch

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “ஜெயிலர்” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், உள்ளிட்ட பல திரைபிரபரலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

Jailer wrap
Jailer wrap [Image source: Sun Pictures ]

ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், ப்ரோமஷன் பணிகள் தொடங்கியுள்ளது. சமீபத்தில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டது. இந்த நிலையில், தியேட்டர் உரிமையாளர் சங்கம் ரஜினிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

அதாவது, ஜெயிலர் திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். அன்றைய தினம் எந்த பெரிய படமும் வெளிவராததால் அனைத்து திரையரங்குகளிலும் ஜெய்லரை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்