ஜெயிலர் பரபர ஷூட்டிங்…! நெல்சனுக்கு ஸ்கூட்டரை பரிசளித்த பிரபல நடிகர்.?
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து “ஜெயிலர்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைபடத்தில் பிரபல நடிகர்களான சிவ ராஜ்குமார், மோகன் லால், நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா. வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மங்களூர் பகுதியில் விறு விறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஸ்கூட்டர் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் நெல்சனுக்கு மஞ்சள் நிற ஸ்கூட்டர் ஒன்றை தான் பரிசளித்துள்ளார். அதற்கான புகைப்படத்தையும், நெல்சன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியீட்டு ஜாக்கி ஷெராஃப்க்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.