ஜெயிலர் முதல் பாடல் எப்போது வெளியீடு..? ப்ரோமோவுடன் அறிவித்த தயாரிப்பு நிறுவனம்.!!
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் ரஜினியுடன் மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான அப்டேட்டுகளை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது.
அதன்படி, படத்திற்கான முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும், அந்த பாடலுக்கான ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
It’s finally time for #JailerFirstSingle – #Kaavaalaa ????
Get ready to dance with @tamannaahspeaks on July 6th ! ????????▶️ https://t.co/gKi3Y7ymep@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu…
— Sun Pictures (@sunpictures) July 3, 2023
தற்போது வெளியாகியுள்ள அந்த ப்ரோமோ வீடியோ, மிகவும் கலகலப்பாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, ப்ரோமோவில் வரும் அனிருத்தின் இசையும் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே, அனிருத் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் பெரிதாக பேசப்பட்டு ஹிட்டான நிலையில், நாளை வெளியாகும் இந்த பாடலும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.