இவ்வளோ அருமையா படம் எடுக்கும் ஹரி யாரிடம் உதவி இயக்குநரா இருந்தார் தெரியுமா…..!!!!
தமிழ், சாமி, சிங்கம், வேங்கை என தொடர்ந்து பல கமர்ஷியல் படங்களை கொடுத்து வெற்றிப்பட இயக்குனராக வளம் வருபவர் ஹரி. இவர் இயக்கத்தில் அடுத்து சாமி – 2 திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் ரசிகர்களிடம் ஏற்கனவே செம்ம வரவேற்பை பெற்றுவிட்டது. இந்த நிலையில் ஹரி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அதில் அவரிடம் நீங்கள் யாருடைய உதவி இயக்குனர் என்று கேட்க, ஹரி ‘ நான் கே.பாலச்சந்தர் அவர்களிடம் பல வருடங்கள் உதவி இயக்குனராக இருன்தேன்’ என கூறினார்.
அட இவ்வளவு பரபரப்பாக கமர்ஷியல் படங்கள் எடுக்கும் ஹரி இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் உதவி இயக்குநரா ? என்று எல்லாரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.