அப்படி ஒப்பிடுவது சரியில்லை…நடிகை ரகுல் ப்ரீத் சிங் காட்டம்.!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனக்கு தோன்று கருத்துக்களையும், விஷயங்களையும் வெளிப்படையாகவே பேட்டிகளில் தெரிவித்து விடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தென்னிந்திய சினிமாக்களுக்கும், இந்தி படங்களுக்கும் இடையே சோஷியல் மீடியாவில் போட்டி நடப்பது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ரகுல் ப்ரீத் சிங் ” தென்னிந்திய சினிமாக்களுக்கும், இந்தி படங்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் போட்டி நடப்பது சரியே கிடையாது. மிகவும் தவறான விஷயம். இரண்டு படங்களுமே இந்திய சினிமா துறையின் ஒரு அங்கம்தான்.
எனவே, இதை தவிர, ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல, நல்ல சினிமாவை ரசிகர்கள் எப்போதுமே ஆதரிப்பார்கள். சினிமா துறையில் சிறந்த இயக்குநர்கள் உள்ளனர். அவர்கள் உலக அளவிப் பெயர் கிடைக்கும்படி படங்களை எடுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை, ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தில் அவருக்கு ஜோடியாகவும், கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.