நடிகை தமன்னா தற்போது பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். அடிக்கடி, இவரை பற்றி வதந்தி தகவல் சிலவும் பரவி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவருக்கு திருமணம் என்றும், அவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் தீயாய் ஒரு தகவல் பரவியது.
அதனை தொடர்ந்து, தமன்னா நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இதன் மூலம், தமன்னா காதலிப்பதை உறுதி செய்யும் வகையில் தகவல்கள் பரவியது. இதனையடுத்து, அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய தமன்னா ” என்னை பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகிறது. நான் காதலித்து வருவதாக தகவல் பரப்புகிறார்கள். இதை எல்லாம் படிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு என சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.
மேலும், நடிகை தமன்னா தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல, தெலுங்கில் போலே சூடியன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…