“எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்”… அம்மாவை போல் தமிழ் பேசிய ஜான்வி கபூர்!
ஹிந்தி நடிகை ஜான்வி கபூர் தமிழில் பேசி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நிலையில், அவரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

சென்னை : மறைந்த நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் என்றே சொல்லலாம். அவருக்கு அடுத்தபடியாக, அவருடைய மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் பல ரசிகர்களுடைய கனவு கன்னியாக வளர்த்துக்கொண்டு இருக்கிறார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஜான்வி கபூர் இன்னும் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். விரைவில் அவர் தமிழ் படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பே தமிழில் பேசி ஜான்வி கபூர், அவருடைய அம்மாவை போலவே அழகாக தமிழ் பேசி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இன்றய காலத்தில் தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகைகள் தமிழில் பேசவே தயங்கி வருகிறார்கள். அப்படி இருக்கும் காலத்தில், ஹிந்தி படங்களில் நடிக்கும் ஜான்வி கபூர் தமிழில் பேசி மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். அவர், தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவாரா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டபோது தான் ஜான்வி கபூர் இந்த விஷயத்தை பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” சென்னை என்றாலே எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால், என்னுடைய அம்மாவுடன் நான் இருந்த நேரங்கள் எல்லாமே சென்னையில் தான்.
நீங்கள் அனைவரும் என்னுடைய அம்மா மீது காட்டிய அன்பு தான் நானும், என்னுடைய குடும்பமும் இந்த நிலைமையில் இருப்பதற்கு முக்கியமான காரணம். இதற்கு நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அதற்கு நன்றி” என சற்று எமோஷனலாக பேசினார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவர் பேசிய தமிழ் அழகாக இருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025