கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்திருந்த பிச்சைக்காரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே நடிகராகவும் நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் அவருடன் காவ்யா தாபர், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் வரும் மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், படத்தின் பிரமோஷனுக்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனியிடம் பிச்சைக்காரன் 2-வது படத்தில் உங்களை தவிர வேறு யார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சரியாக இருப்பார் என்று கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, ‘என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தகமாகவும், அதனைப் புரிந்துகொண்டு நடிப்பதற்கு ஏற்ற ஒருவர் மகேஷ் பாபு தான்’ என்று கூறியுள்ளார். அவர் அளித்த இந்த பதிலைக் கண்டு மகேஷ்பாபு ரசிகர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி உற்சாகமடைந்தனர்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…