நடிகர் சிம்பு தற்போது “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான “நெடுஞ்சாலை” படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
படத்தை கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தில் இருந்து சமீபத்தில் கூட முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகவுள்ளது. படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்து தல படத்தின் இயக்குனர் கிருஷ்ணா வருத்தத்துடன் பேசியுள்ளார். அது என்னவென்றால், சிம்பு இதற்கு முன்பு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் சிம்பு நீளமான முடி மற்றும் தாடியுடன் வருவார்.
ஆனால், இந்த கெட்டப்பை சிம்பு “பத்து தல” திரைப்படத்திற்காக தான் வைத்திருந்தாராம். பிறகு இரண்டாவது பாகத்திற்கு லீட் கொடுக்கவேண்டும் என்பதற்க்காக அதே கெட்டப்பில் படத்தில் 5 நிமிடம் நடித்தாராம். எனவே இதனால் இது தன்னுடைய படத்தின் கெட்டப் அந்த கெட்டப்பில் அவர் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்ததது தனக்கு சற்று வருத்தமாக இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்து தல இயக்குனர் கிருஷ்ணா பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” ஒரு படத்திற்கு மிகப் பெரிய புரமோஷனே அந்த படத்தில் நடிக்கும் நடிகரின் லுக்தான், ஆனால், சிம்பு ‘பத்து தல’ லுக்கில் ‘வெந்து தணிந்தது காடு’ க்ளைமேக்சில் நடித்தார். அது சற்று கஷ்டமாக இருந்தது. சிம்புவும், கெளதம் மேனனும் இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால், தன்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை” என வருத்தத்துடன் இயக்குனர் கிருஷ்ணா கூறியுள்ளார்.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…