சிம்பு அப்படி நடிச்சது ரொம்ப கஷ்டமா இருந்தது…வருத்தம் தெரிவித்த ‘பத்து தல’ இயக்குனர்.!

Default Image

நடிகர் சிம்பு தற்போது “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான “நெடுஞ்சாலை” படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

STR Pathu Thala
STR Pathu Thala [Image Source: Twitter ]

படத்தை கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தில் இருந்து சமீபத்தில் கூட முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகவுள்ளது. படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Pathu Thala
Pathu Thala

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்து தல படத்தின் இயக்குனர் கிருஷ்ணா வருத்தத்துடன் பேசியுள்ளார். அது என்னவென்றால், சிம்பு இதற்கு முன்பு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் சிம்பு நீளமான முடி மற்றும் தாடியுடன் வருவார்.

vendhu thanindhathu kaadu climax
vendhu thanindhathu kaadu climax [Image Source : Google ]

ஆனால், இந்த கெட்டப்பை சிம்பு  “பத்து தல” திரைப்படத்திற்காக தான் வைத்திருந்தாராம். பிறகு இரண்டாவது பாகத்திற்கு லீட் கொடுக்கவேண்டும் என்பதற்க்காக அதே கெட்டப்பில் படத்தில் 5 நிமிடம் நடித்தாராம். எனவே இதனால் இது தன்னுடைய படத்தின் கெட்டப் அந்த கெட்டப்பில் அவர் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்ததது தனக்கு சற்று வருத்தமாக இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்து தல இயக்குனர் கிருஷ்ணா பேசியுள்ளார்.

krishna about str
krishna about str [Image Source : Google ]

இது குறித்து பேசிய அவர் ” ஒரு படத்திற்கு மிகப் பெரிய புரமோஷனே அந்த படத்தில் நடிக்கும் நடிகரின் லுக்தான், ஆனால், சிம்பு ‘பத்து தல’ லுக்கில் ‘வெந்து தணிந்தது காடு’ க்ளைமேக்சில் நடித்தார். அது சற்று கஷ்டமாக இருந்தது. சிம்புவும், கெளதம் மேனனும் இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால், தன்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை” என வருத்தத்துடன் இயக்குனர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்