சமூகநீதி என்ற வார்த்தையை சொல்லிக் கொடுத்தது பா.ரஞ்சித் தான்! மேடையில் உண்மையை உடைத்த கார்த்தி!

pa ranjith and karthi

நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கார்த்தியின் 25-வது திரைப்படம் இந்த திரைப்படம் என்பதால் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பல சுவாரசியமான சம்பவங்களும் நடந்தது. குறிப்பாக சூர்யா கார்த்தியை பற்றி பேசியது, தமன்னா கார்த்தியை பற்றி பேசியது, லோகேஷ் கனகராஜ் கைதி 2 படங்களை பற்றி பேசியது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற பாடல்களை மேடையில் பாடியது என பல நிகழ்வுகள் நடந்தது.

இந்த நிலையில், இந்த விழாவில் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்தும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய கார்த்தி எனக்கு பா .ரஞ்சித் எடுக்கும் படங்கள் எல்லாம் மிகவும் பிடிக்கும். சமூகநீதி என்ற வார்த்தையை சொல்லிக் கொடுத்தது பா.ரஞ்சித் தான் என்று பேசினார்.

முதலில் கைதி 2 அப்புறம் தான் ரோலக்ஸ்! ‘ஜப்பான்’ விழாவில் அப்டேட் விட்ட லோகேஷ் கனகராஜ்!

அவரை தொடர்ந்து பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் ” மெட்ராஸ் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு நான் இந்த திரைப்படம் தலித்படம் தான் அப்படி தான் எடுக்கப்போகிறேன் இதில் எந்த சமரசம் சொன்னாலும் நான் செய்யமாட்டேன் என்று கார்த்தி மற்றும் தயாரிப்பாளரிடம் சொல்லி தான் எடுத்தேன். அவர்களுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு எனக்கு சப்போர்ட் செய்தார்கள்.

அவர்கள் எனக்கு அந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த காரணத்தால் தான் நான் இங்கு நிக்கிறேன். அந்த படம் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத படம்” எனவும் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் கார்த்தி ஒரு படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay