tamanna about karthi [File Image]
நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா இருவரும் ஜோடியாக நடித்த படங்களுக்கு எல்லாம் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இவர்களுடைய நடிப்பில் வெளியான பையா, தோழா, சிறுத்தை உள்ளிட்ட படங்களில் இவர்களுடைய காதல் காட்சிகள் பலருடைய பேவரைட் ஆக இருக்கிறது. அந்த அளவிற்கு திரையில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருக்கும்.
இந்நிலையில், சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களும் கூட. எனவே, சினிமாவை பற்றி இருவருமே மாறி மாறி பேசிக்கொள்வது உண்டு. அந்த வகையில் நட்பு காரணமாக தமன்னாவை நடிகர் கார்த்தி தன்னுடைய 25-வது படமான ஜப்பான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு தமன்னாவை அழைத்திருந்தார்.
அங்கு இருவரையும் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்து மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்றும் கூறிவந்தார்கள். இந்த நிலையில், விழாவில் பேசிய நடிகை தமன்னா நடிகை கார்த்தி தேர்ந்து எடுத்து நடித்து வரும் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற காரணத்தால் புது புது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நான் தமிழ் கற்றுக்கொண்டது கார்த்தியால் தான் எனக்கு அவர் தான் அவருடன் நடிக்கும்போது தமிழ் கற்றுக்கொடுத்தார். நாங்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம் அந்த படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என தமன்னா கூறினார்.
பிறகு பேசி முடிந்த பின் மேடையில் பையா படத்தில் இடம்பெற்றிருந்த ” அடடா மழைடா ” பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பாடலை கேட்டவுடன் இருவரும் பையா வைபுக்கு சென்று நடனம் ஆட தொடங்கினார்கள். இதனால் அரங்கமே ஆனந்தத்தில் ஆழ்ந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…