அனுமதி கொடுக்கவே 6 மாசம் ஆகும்…ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்.!
சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்ற ரசிகரின் கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பதில் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர்கள் என்றாலே எதாவது பெரிய பெரிய இடங்களில் இசை நிகழ்ச்சி வைத்துவிடுவார்கள். ரசிகர்களும் இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி சென்றுவிடுவார்கள். அந்த வகையில், பல இசையமைப்பாளர்கள் தமிழகத்தில் உள்ள சென்னை,கோவை உள்ளிட்ட இடங்களில் இசை கச்சேரி நடத்தினார்கள்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் நடத்தாமல் மலேசிய ஆகிய பகுதிகளில் இசை கச்சேரி நடத்தினார். நீண்ட ஆண்டுகள் ஆகியும் சென்னையில் ரஹ்மான் நடத்தவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் அவர் சென்னையில் வைத்து இசை நிகழ்ச்சி எப்போது நடத்துவார் என்று ஆவலுடன் காத்துள்ளனர்.
Permissions,permissions,permissions 6months process ..✊ https://t.co/Lx2879U75B
— A.R.Rahman (@arrahman) February 8, 2023
இதனையடுத்து, ரசிகை ஒருவர் டிவிட்டரில் ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்னையை மறந்துடீங்கா..? எப்போது இசை கச்சேரி நடத்துவீர்கள் என்பது போல கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் ” “ஒரு இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்க 6 மாதம் ஆகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Pune! How’s it going!
Looking forward to performing for you all on the 7th of March at The Mills, Rajabahadur International Ltd Pune.
Book now????: https://t.co/uSxzdsMLkh#1bhksuperbar #2bhkdinerkeyclub @heramb_shelke @paytminsider @btosproductions pic.twitter.com/N7usCUBzBD
— A.R.Rahman (@arrahman) February 8, 2023
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் மார்ச் மாதம் 7-ஆம் தேதி புனேவில் பிரமாண்ட இசை கச்சேரி நடத்தவுள்ளார். அதற்கான டிக்கெட்காண முன் பதிவு விரைவில் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.