சினிமா

மங்காத்தா மாதிரி ஹிட் ஆகணும்! ‘விடாமுயற்சி’ படத்தின் வில்லனை மாற்றிய படக்குழு?

Published by
பால முருகன்

அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்திலே படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கியது . இந்த திரைப்படத்தை பார்க்க கோலிவுட் சினிமாவை ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.

விடாமுயற்சி படத்தில் நடந்த அதிரடி மாற்றம்! கவர்ச்சிக்காக நடிகையை மாற்றிய படக்குழு!

படத்திற்கான படப்பிடிப்பும் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பும் கூட வெளியாகவே இல்லை வரும் வெறும் சினிமா வட்டாரத்தில் கசிந்த தகவல் தான் ரசிகர்களுக்கு அப்டேட் ஆக அமைந்தது. படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அப்டேட்டை விடாமல் இருப்பதன் காரணமாக அஜித் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இதற்கிடையில்,  படத்தில் சஞ்சய் தத் நடிப்பதன் காரணமாக படத்தில் வில்லனாக அவர் தான் நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்திருக்க கூடிய  தகவல் என்னவென்றால், இந்த திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க வில்லையாம். அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறாராம்.

VidaaMuyarchi : எடுக்காத படத்திற்கு வில்லன் ஒண்ணுதான் குறைச்சல்! விடாமுயற்சியால் வேதனையில் ரசிகர்கள்!

வில்லனாக நடிகர் அர்ஜுன்தான் நடித்து வருகிறாராம்.  இதனை பட குழு சஸ்பென்ஸ் -ஆக வைத்திருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே, லியோ திரைப்படத்திலும் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன் ஆகிய மூன்று பேரும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் மூன்று பேரும் அப்படியே விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளதாக வரும் தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

மேலும் ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்த வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக புதிய தகவலும் இன்று காலையிலிருந்து வெளியானது.  அது என்னவென்றால் விடாமுயற்சி திரைப்படத்தில் பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

2 hours ago

”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…

2 hours ago

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

3 hours ago

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

3 hours ago

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

4 hours ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

4 hours ago