மங்காத்தா மாதிரி ஹிட் ஆகணும்! ‘விடாமுயற்சி’ படத்தின் வில்லனை மாற்றிய படக்குழு?

அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்திலே படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கியது . இந்த திரைப்படத்தை பார்க்க கோலிவுட் சினிமாவை ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.
விடாமுயற்சி படத்தில் நடந்த அதிரடி மாற்றம்! கவர்ச்சிக்காக நடிகையை மாற்றிய படக்குழு!
படத்திற்கான படப்பிடிப்பும் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பும் கூட வெளியாகவே இல்லை வரும் வெறும் சினிமா வட்டாரத்தில் கசிந்த தகவல் தான் ரசிகர்களுக்கு அப்டேட் ஆக அமைந்தது. படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அப்டேட்டை விடாமல் இருப்பதன் காரணமாக அஜித் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், படத்தில் சஞ்சய் தத் நடிப்பதன் காரணமாக படத்தில் வில்லனாக அவர் தான் நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், இந்த திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க வில்லையாம். அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறாராம்.
வில்லனாக நடிகர் அர்ஜுன்தான் நடித்து வருகிறாராம். இதனை பட குழு சஸ்பென்ஸ் -ஆக வைத்திருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே, லியோ திரைப்படத்திலும் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன் ஆகிய மூன்று பேரும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் மூன்று பேரும் அப்படியே விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளதாக வரும் தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மேலும் ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்த வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக புதிய தகவலும் இன்று காலையிலிருந்து வெளியானது. அது என்னவென்றால் விடாமுயற்சி திரைப்படத்தில் பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025