இது மாதிரியான படங்களை தடை செய்ய வேண்டும் – இயக்குனர் சேரன்

மாநில அரசும் இதுபோன்ற படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன்பதாக வெளியான, இரண்டாம் குத்து படத்தின் டீசரும், போஸ்டரும் மிகவும் ஆபாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த போஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரையுலக பிரபலங்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற்னர்.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தின் போஸ்டர் குறித்து அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, இயக்குனர் சேரன் அவர்கள், ‘மக்கள் இதுபோன்ற படங்களை நிராகரிக்க வேண்டும் என்றும், இருட்டறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் நல்ல வசூலை ஈட்டியதே இது படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாக காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தின் போஸ்டர் அருவருப்பானது. அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும். மாநில அரசும் இதுபோன்ற படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025