ஐடி ரெய்டு : அஜித் -விஜய் பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

mythri movie makers naveen

சென்னை :  வருமான வரித்துறை கடந்த சில நாட்களாகவே அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று ஒரே நாளில் அஜித் விஜய் படங்களின் தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எந்தெந்த தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர் என்பது பற்றி விவரமாக பார்ப்போம்..

வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு

விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தினை தயாரித்திருந்த தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீட்டில் இன்று வருமான வரித்துறை  அதிகாரிகள் அதிரடியான சோதனையில் ஈடுபட்டனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்து நடத்தி வரும் இவர் பெரிய பெரிய படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த சூழலில் இன்று திடீரென 55 அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள தில் ராஜு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். வீடுமட்டுமின்றி அவருக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட மொத்தமாக 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள்.

குட்பேட் அக்லி தயாரிப்பாளர் நவீன் 

‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘புஷ்பா-2’ போன்ற படங்களை தன்னுடைய மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் நவீன் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

நவீனின் விடு மட்டுமின்றி அவருடைய உறவினர்கள், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.  இந்தச் சோதனை, வருமான வரித்துறையின் வரி ஏமாற்றம் தொடர்பான வழக்கின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
tamilisai soundararajan
kantara chapter 1
seeman
Thiruvalluvar - TN CM MK Stalin
donald trump dance
Instagram Reels