சினிமா

கவர்ச்சி நடிகையாக இருக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு! வேதனையுடன் பேசிய சோனா!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் “பூவெல்லாம் உன் வாசம்” எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சோனா ஹெய்டன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர்  ஷாஜகான், பொன் மேகலை, கேல்விக்குறி, மிருகம், குசேலன், குரு என் ஆளு, சொக்கலி, நினைவில் நின்றவள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடுத்த காரணத்தால் தொடர்ச்சியாக இவருக்கு கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிறகு தொடர்ச்சியாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே இவர் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்ச்சியாக கவர்ச்சியான வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால் பிறகு சின்னத்திரையில் சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்கள் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சோனா தன்னுடைய பயோபிக் வெப் சீரிஸ் ஆகா எடுக்க அதற்கான கதையை தான் தயார் செய்து இருப்பதாகவும், கவர்ச்சி நடிகையாக இருக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு என சற்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை பிம்பத்தை மாற்றவேண்டும் 

பேட்டியில் பேசிய நடிகை சோனா ” நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தொடர்ச்சியாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த காரணத்தால் என்னை கவர்ச்சி நடிகை என்றே முத்திரை குத்திவிட்டார்கள். அந்த பிம்பத்தை மாற்ற நான் மிகவும் சிரமைபட்டேன். கவர்ச்சி நடிகையாகவே இருக்க மிகவும் கஷ்டம் இதனை உடைத்தெறியவேண்டும் என்பதற்காகவே சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தேன் ” என தெரிவித்துள்ளர்.

என்னுடைய தவறு தான்  

நான் இதனை வருடங்கள் ஆகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை. எனக்கு கல்யாணம் செய்யமுடியவில்லை என்று நினைக்கும்போதெல்லாம் எதோ ஒரு தவறு செய்துவிட்டமோ என்று தோணும். ஆரம்பத்தில் இருந்து சரி இப்போது வரை என்னை ஒரு கவர்ச்சி நடிகையாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். அது என்னுடைய தவறுதான்” என கூறியுள்ளார்.

இயக்குனர் அவதாரம் எடுத்த சோனா 

நடிகையாக கலக்கி வந்த சோனா தற்போது ஒரு வெப் சீரியஸை இயக்குவதன் மூலம் இயக்குனராக களமிறங்கவுள்ளார். ஷார்ட் ஃபிளிக்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த வெப் சிரியஸை தயாரிக்கவும் செய்து இருக்கிறார். இதற்கான கதையையும் அவரே எழுதி இருக்கிறார்.

வெப் சீரிஸை இயக்குவது பற்றி சோனா 

எனக்கு இந்த கதையை எழுதியவுடன் இதனை பல சீசன்கள் கொண்ட ஒரு வெப் தொடராக எடுக்கலாம் என ஆசை வந்தது.கதையை பற்றி எனக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பேசினோம் அவர்களும் கதையை கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாக கூறினார்கள். பிறகு கதையை கேட்டுவிட்டு ஷார்ட் ஃபிளிக்ஸ் தயாரிப்பு  நிறுவனம் தயாரிக்க முன் வந்ததது” எனவும் சோனா தெரிவித்துள்ளார்.

மேலும், சோனா தயாரித்து இயக்கும் இந்த வெப்சீரிஸ்-க்கு “ஸ்மோக்(Smoke)”  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பும் நாளை முதல் தொடங்கப்படவுள்ளது. விரைவில் இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் மற்ற விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

13 minutes ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

44 minutes ago

ஈரோடு கிழக்கு : “வாக்கு சேகரிப்பதை விட ‘இது’ தான் முக்கியம்” முதலமைச்சர் போட்ட உத்தரவு!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தலில் திமுக…

1 hour ago

Live : இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…

2 hours ago

“ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் இல்லை!” புது கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்!

டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…

2 hours ago

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

15 hours ago