மக்களின் அன்பு தான் என்னை இப்படி விலையுயர்ந்த பொருட்களை கூட வாங்க வைக்கிறது! பிரபல நடிகர் உருக்கம் !
நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர். இவர் தற்போது பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார். இவர் விலை உயர்ந்த கேரவன் ஒன்றை வாங்கியுள்ளார். சுமார் பல கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இந்த கேரவனுக்கு பால்கன் என்று பெயரிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த கேரவனுக்கு டிசைன் செய்வதற்கு 3 கோடி செலவு செய்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவர் வாங்கிய கேரவன் புகைப்படத்தை பதிவிட்டு, ” மக்களின் அன்பு. அந்த அன்புதான் என்னை இப்படி விலையுயர்ந்த பொருட்களை கூட வாங்க வைக்கிறது. மிக்க நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.