சினிமா துறையில் பொதுவாக ஒரு இயக்குனர் பெரிய வெற்றி படத்தை கொடுத்து விட்டால் அவர்களை தங்களுடைய அடுத்த படங்களில் இயக்க வைக்க பல நடிகர்கள் அழைத்தே வாய்ப்பு கொடுப்பார்கள். ஆனால் அதே ஒரு இயக்குனர் தோல்வி படமும் அல்லது சுமாரான படமும் கொடுத்து விட்டால் சிறிய நடிகர்கள் கூட அவர்களை அழைத்து கதை கேட்பதில்லை.
இதன் காரணமாகவே அந்த இயக்குனர்கள் படங்களை இயக்காமல் பல ஆண்டுகள் கதைகளை வைத்துக்கொண்டுவிட்டு யாரிடம் சொல்லலாம் என இருப்பார்கள். அப்படிதான் இயக்குனர் பாண்டிராஜ் கூட, இவர் கடைசியாக நடிகர் சூர்யாவை வைத்து ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் கடந்த ஆண்டு 2022-மார்ச் மாதம் வெளியானது.
எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்ற காரணத்தினால் இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் பாண்டியராஜ் எந்த படத்தையும் இயக்கவில்லை. சமீபத்தில் நடிகர் விஷாலை சந்தித்து அவர் ஒரு கதையை கூறி அந்த திரைப்படத்தினை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், அந்த திரைப்படமும் சில காரணங்களால் இன்னும் எடுக்காமல் இருக்கிறது.
நீ ஜெயிச்சிட்ட மாறா! முதன் முறையாக கார்த்தியை கட்டிப்பிடித்த சூர்யா…எதற்காக தெரியுமா?
இதனையடுத்து, கடைசியாக அவருடைய இயக்கத்தில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ சரியாக போகாத காரணத்தால் விஷாலை வைத்து அவர் இயக்கும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் விருப்பம் இல்லை படத்தை எடுக்கவேண்டாம் என்பது போல குறிவிட்டார்களாம். இதனால் அந்த படம் அப்படியே கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அந்த கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் இயக்கலாம் என இயக்குனர் பாண்டிராஜ் முடிவு செய்திருக்கிறாராம்.பல மெரினா, பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா என பல படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்த பாண்டிராஜ் தற்போது நல்ல கதை வைத்துக்கொண்டும் படம் இயக்க முடியாமல் இருப்பதால் சோகத்தில் இருக்கிறாராம். இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…