கவினை தொடமுடியாத சந்தானம்! இங்க “நான்தான் கிங்கு” முதல் நாள் வசூல்?
சென்னை : இங்க நான்தான் கிங்கு படம் வெளியான முதல் நாளில் ஸ்டார்படத்தை விட குறைவாக வசூல் செய்துள்ளதாக தகவல்.
சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 17 திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “இங்க நான்தான் கிங்கு”. இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் பிரியாலயா, லொள்ளு சபா சேசு, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், லொள்ளு சபா மாறன், பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த படம் முழுக்க முழுக்க காமெடியான கதையம்சம் கதையம்சத்தை கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ள காரணத்தால் படம் மக்களுக்கு மிகவும் பிடித்து போக படத்தை பார்க்க திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள். படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த படத்திற்கு முன்பு சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அவருடைய அடுத்த படமான இங்க நான்தான் கிங்கு படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே, படத்திற்கு முதல் நாள் வசூலும் நன்றாக கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இங்க நான்தான் கிங்கு படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 10-ஆம் தேதி கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 3.5 கோடி வசூல் செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், கவினுடைய ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூலா இங்க நான்தான் கிங்கு படம் முறியடிக்க தவறியுள்ளது. இருப்பினும், இங்க நான்தான் கிங்கு படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் கண்டிப்பாக வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.