நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் அடுத்ததாக ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு வில்லனாக ஏற்கனவே விஜய்சேதுபதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த தலைவர் 171 திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கல்யாண செலவுக்கு கஷ்டப்பட்ட பொன்னம்பலம்! கேப்டன் செய்த பெரிய உதவி!
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தலைவர் 171 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வேளைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் பிஸியாக இருக்கிறார்.
எனவே, இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் சேதுபதி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் இனிமேல் தான் வில்லனாக நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார். எனவே, தலைவர் 171 படத்தில் எப்படி வில்லனாக நடிப்பார் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…