Top Cooku Dupe Cooku : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் வடிவேலு கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியான டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இணைந்துள்ளார். அவர் மட்டுமில்லை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி சீசா 5 கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிலையில், இந்த டாப்பு குக்கு டூப்பு குக்கு விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இருந்தது. அந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த பலரும் இந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து காப்பி தான் அடித்து எடுத்து இருக்கிறார்கள் என்று கூறியும் வந்தனர்.
இதனையடுத்து, இந்த டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெறவேண்டும் என்ற காரணத்தால் சன் தொலைக்காட்சி மற்றும் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் வெங்கடேஷ் பட் வடிவேலுவை களமிறக்க முடிவு செய்துள்ளார்களாம். ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் ஒரு பிரபலம் வருவதாக வெங்கடேஷ் பட் கூறியிருந்தார்.
எனவே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அளவிற்கு டஃப் கொடுக்கவேண்டும் என்ற காரணத்தால் வடிவேலுவையை நிகழ்ச்சியில் களமிறக்க முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையில் தற்போது இறங்கி இருக்கிறார்களாம். வடிவேலு கேட்கும் சம்பளத்தை அவர்கள் கொடுத்தார்கள் என்றால் கண்டிப்பாக வடிவேலு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவிப்பாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
சமையல் மட்டுமின்றி முழுக்க முழுக்க காமெடியும் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் வடிவேலுவை களமிறக்க உள்ளனர். கண்டிப்பாக வடிவேலு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்றால் காமெடி எப்படி இருக்கும் என்று சொல்லியா தெரியவேண்டும். நிகழ்ச்சியில் மோனிஷா, பரத், ஜிபி முத்து என ஏற்கனவே பலரும் இருக்கிறார்கள். எனவே, நிகழ்ச்சி நன்றாக இருந்தால் கண்டிப்பாக பெரிய அளவில் வரவேற்பை பெரும். எனவே, எப்போது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…