பாலிவுட்டில் ரசிகர்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான், தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து கொடுத்து வருகிறார். குறிப்பாக இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பதான், ஜவான், டன்கி ஆகிய படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக ஹிட் ஆகி வசூலை குவித்து இருந்தது.இதில் கடந்த ஆண்டு ஜனவரி 2023 -ஆம் ஆண்டு வெளியான பதான் வசூலில் பல சாதனைகளை படைத்ததது.
இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், சல்மான் கான், ஜான் ஆபிரகாம், ஏக்தா கவுல், மான்சி தக்சக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தினை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார். படம் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் ஆனது.
மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் பில்லா!
வசூல் ரீதியாக மட்டும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1,050.30 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. பாலிவுட் சினிமாவில் இருந்து அந்த சமயம் வெளியான படங்கள் எல்லாம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் பதான் வெற்றி கொடுத்து பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்தது என்றே கூறலாம்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில் ஆதித்யா சோப்ரா மீண்டும் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கிறாராம். டிசம்பர் 2024 இல் படப்பிடிப்பைத் தொடங்கும் என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…