சீன்ஸ் பாதி சரியில்லை! ராயன் படத்தின் ரிலீஸ்க்கு வந்த திடீர் சிக்கல்?

ராயன் : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் சில காட்சிகள் மீண்டும் எடுக்கப்படவுள்ளதாகவும், இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேப்டன் மில்லர் படத்தினை தொடர்ந்து தனுஷ் தனது 50-வது திரைப்படமான “ராயன்” என்ற படத்தை இயக்கி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்ஜே சூர்யா, நித்யா மேனன், செல்வராகவன், செல்வராகவன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வரும் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த சூழலில், ராயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் வெளியாக இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருக்கும், நிலையில்படத்தின் பின்னணி இசை சேர்ப்பு கொஞ்சம் மெதுவாக நடைபெற்று வருகிறதாம். அதற்கான பணியில் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஈடுபட்டு கொண்டு இருக்கிறாராம்.
அதுமட்டுமின்றி, படத்தில் சில காட்சிகள் தனுஷ் நினைத்தபடி சரியாக இல்லயாம். எனவே, அந்த காட்சிகளை மட்டும் மீண்டும் ரீ ஷூட் செய்வதற்கு நடிகர் தனுஷ் திட்டமிட்டுள்ளாராம். இதன் காரணமாக தான் ராயன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டு படம் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதாம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. படம் அறிவித்த படி அதே தேதியில் வெளியாகுமா இல்லையா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.